மன்னார் மருதமடு அன்னை ஆரம்பத்தில் வீற்றிருந்த இடத்தில் புதிய ஆலயத் திறப்பு விழா

மன்னார் மருதமடு அன்னை ஆரம்பத்தில் வீற்றிருந்த இடத்தில் புதிய ஆலயத் திறப்பு விழாவில்

(பிராந்திய செய்தியாளர்) 19.02.2017

மன்னார் மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தை திருத்தலத்தில் அன்னைக்கான புதிய ஆலயம் நிர்மானிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை (18.02.2017) நடைபெற்றபோது

1) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா, நகர திட்டமிடல் குடிநீர் வசதி பிரதி அமைச்சர் திருமதி பெர்ணான்டோபிள்ளை நிரன்சனி, கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சித்திரால் பெர்ணான்டோ ஆகியோர் வானூர்தி மூலம் மாந்தை பகுதிக்கு வருகை தந்தபோது மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்பணி முரளி அடிகளார் மற்றும் சிரேஷ;ட சட்டத்தரனியும் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத் தலைவருமான அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் இவர்களை வரவேற்பதையும்

2) மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை, யாழ் ஓய்வுபெற்ற ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம், திருமலை ஆயர் மேதகு நோயல் இம்மனுவேல், கொழும்பு உயர்மறைமாவட்ட துணை ஆயர் மேதகு இம்மனுவேல் பெர்ணான்டோ ஆண்டகைகளையும் பிரதிநிதிகளையும் வரவேற்பதையும்

3) புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை ஏனைய ஆண்டகையுடன் இணைந்து அபிஷேகம் செய்து ஆலயத்தை திறந்து வைப்பதையும்

4) வருகை தந்த ஆயர்களுடன் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்

5) பங்குபற்றிய சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பக்தர்கள் கூட்டங்களையும் படங்களில் காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *