ஓலைத்தொடுவாயில் 180 மில்லியனில் கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி நிலையம்…

ஓலைத்தொடுவாயில் 180 மில்லியனில் கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி நிலையம்…

இலங்கையின் முதலாவது கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் மன்னார் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட ஓலைதொடுவாய் கிராமத்தில் 01 ஏக்கர் விஸ்தீரணமான பகுதியில், மத்திய கடற்றொளில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் 180 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மானிக்கப்படவுள்ள குறித்த உற்பத்தி நிலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25/02/2017 காலை 10 மணியளவில் நடைபெற்றது.

குறித்த கடல் அட்டை குஞ்சுகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு நிலயத்திற்கான அடிக்கல்லை மத்திய கடற்றொளில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உப்பாலி மொகட்டி ஆகியோர் இணைந்து நாட்டியதோடு ஞாபகார்த்த கல்லையும் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து நிகழ்விற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோரும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் வருமானமாக 750 மில்லியன் பெறமுடியும் என்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.

 

LikeShow More Reactions

Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *