வெளிவிவகார அமைச்சரின் வேலையை சுலபமாக்கிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் விபரங்களுக்கு

ஐ நா வழங்கும் முன் ஐயா வழங்கிவிட்டார் கால அவகாசம்.

கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசம் வழங்கபடவேண்டும். ஐயா அறுவுறுத்தல்.

நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள தவறியுள்ளது. குறிப்பாக
அவசரமாக ஆற்ற வேண்டிய பல விடயங்களை நீதிமுறை தவறி செய்ய மறுகிறது.

இரண்டு வருடம் கடந்தும் தமது சொந்த காணியை விடுவிக்க மறுத்துவருவதானல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் யுத்தம் முடிந்து எட்டு வருடம் ஆகியும் சிறை வாழ்க்கை முடிவுறாமல் ஏக்கத்துடன் நாட்களை கழிக்கிறார்கள். அவன் சார்ந்த குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறார்கள்.

காணமல் போனவர்களின் நிலை அறியாது அதற்கும் மீட்சி இன்றி
வாடும் உறவுகள் அதன் நிலை அறிய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நேற்றைய கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை என அறிவித்துள்ளார்.முன்னமும் இக்கருத்தை அவர் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

எந்த நிபந்தனைக்கும் அடிபணியாத அரசுக்கு கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசம் வழகப்படல் வேண்டும் என ஐயா அறிவித்தது புதுவித ராஜதந்திரம் உலக்கைக்கும் வலிக்காமல் உரலும் நோகமல் அரசுக்கு அவகாசம் வழங்க சொல்லாடல்களை பாவித்துள்ளார்.

நிர்பந்தம் வழங்கவேண்டிய நாம் கால அவகாசத்துக்கு துணை போவது வடி கட்டிய வஞ்சனை.
சாத்தியமானதை செய்யமறுக்கும் அரசை நம்ப சொல்லி நாசமறுக்க முனையும் தலைவர்களை நாம் தேர்ந்து எடுத்தது எமது அறியாமையே.

வெளிவிவகார அமைச்சரின் வேலையை சுலபமாக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு சமர்ப்பணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *