தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகாதிபத்திய போக்கை கூட்டமைப்பு உறுப்பினரே துணிவுடன் போட்டுடைத்துள்ளாா்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகாதிபத்திய போக்கை கூட்டமைப்பு உறுப்பினரே துணிவுடன் போட்டுடைத்துள்ளாா்
நன்றி சிவசக்தி ஆனந்தன் அண்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவே செயற்படுகிறது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று எதிர்க்கட்சியாக செயற்படாது ஆளும் கட்சியாகவே செயற்படுகிறது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சிவராமின் முயற்சியால் அப்போதைய அரசியல் சூழ்நிலைகளை கொண்டு விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடி உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நான் கூட்டமைப்பில் இருக்கின்றேன். கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது சம்பந்தன் ஐயா விருப்பம் கொண்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கு கீழ் உள்ள அமைப்பாக அதனைப் பார்த்தார். ஆனால் பரராஜசிங்கம், ஆனந்தசங்காி ஆகியோர் மிகவும் விருப்பம் கொண்டிருந்தனர்.

எனினும் சம்பந்தரிடம் மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறப்பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனால் இன்று மிகவும் மோசமாக சர்வாதிகார தன்மையுடன் கூட்டமைப்பில் உள்ள சில கட்சிகள் செயற்படுகின்றது.

மகிந்த கட்சிக்கு ஆள் பிடித்தது போல் தமது கட்சிக்கு ஆள் பிடிக்கின்றனர். மகிந்தவுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றது. சிறீதரனை எமது கட்சியினூடாக நாமே களம் இறக்கினோம். சிவமோகனை நாமே களமிறக்கினோம். ஆனால் இன்று நடந்துள்ளது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால் ஏதாவது ஒரு கட்சியினூடாகவே போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. அதற்காகத் தான் நாம் யாப்பொன்றை உருவாக்கி பதிவு செய்யுமாறு கோருகின்றோம்.

எவரும் நேரடியாக கூட்டமைப்பினூடாக தனது தேர்தல் களத்தை நிர்ணயிக்கலாம். ஆனால் அது நடைபெறாமல் உள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியை உருவாக்கினார்கள். இன்று ஒரு வருடத்தினுள் அவர்கள் யாப்பை தயாரித்து பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் 16 வருடமாகியும், கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் உள்ளது. அது மாத்திரமின்றி கூட்டமைப்புக்கு கணக்கறிக்கை கூட இல்லாமல் இருக்கின்றது. பல மில்லியன் ரூபா தேர்தலுக்காகவும் புனர்வாழ்வுக்காகவும் கூட்டமைப்புக்கு வந்துள்ளது.

அதற்கான முறையான கணக்கறிக்கைகள் இல்லை. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நான் இருக்கின்றேன். ஆனால் எனக்கும் கணக்குகள் காட்டப்படவில்லை.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. ஆளும் கட்சியாகவே செயற்பட்டு வருகின்றது. 1960 ஆம் ஆண்டு பெர்னான்டோ என்பவர் சுயேற்சையாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி சபாநாயகரானார்.

ஆனால் அவர் சபாநாகராக தொடர்ந்தும் இருப்பதற்கு ஆளும் கட்சிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சுதந்திரகட்சியில் இணைந்தார். அவ்வாறேனில் எப்படி கூட்டமைப்புக்குள் உள்ளவர்கள் அதற்கு நிகரான பதவிகளை வகித்து வருகின்றனர். எனவே மக்கள் விழிப்படைந்து முடிவெடுக்கவேண்டிய நிலையில் உள்ளனர் சிவசக்தி ஆனந்தன் என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *