இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில இறாணுவ வீரர்களே குற்றமிழைத்தனர் மறதி நோயுற்ற சமந்தன் ஐயா கூருகின்றார்.

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில இறாணுவ வீரர்களே குற்றமிழைத்தனர் மறதி நோயுற்ற சமந்தன் ஐயா கூருகின்றார். விபரங்களுக்கு

இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக தொடர்ச்சியாக முன்வைக்கடும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஜெனிவாவில் நிரூபிக்க குழுவொன்று அங்கு செல்ல உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சகோதர ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.

நாம் யுத்தத்தில் வென்ற பின்னர் எமக்கு ஆதரவாக ஜெனிவாவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதாவது இந்தப் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது என்பதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் பிரச்சினையை மீண்டும் எடுப்பதற்காக தருஸ்மான் குழு அறிக்கை போல, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் எமது நாடு தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர், 2014 ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, மனித உரிமைகள் பேரவை ஊடாக, மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் யுத்தம் தொடர்பில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர், மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன் குழுவொன்றை நியமித்து, எமது இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுடன் இணைந்து, எமது நாட்டுக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவந்தார்.

எமது இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டாலும், இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என பரணகம குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கை படையினர் போர்க்குற்றத்தல் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வுக்கு குழுவொன்றை அனுப்ப உள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த குழுவின் வெற்றிக்கு துணையாக சமந்தன் அவர்கள் இலங்கை இராணுவம் குற்றம் இழைக்கவில்லை, ஒரு சில இராணுவ வீரர்களே தவறு செய்துள்ளனர் அவர்களை இலங்கை அரசு தண்டித்துள்ளது என்று சம்பந்தன் உளறியுள்ளர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *